மட்டக்களப்பு மாவட்டத்தில் “பிரஜா சக்தி” வேலைத்திட்டம் தொடர்பான விசேட விழிப்புணர்வு கூட்டம்மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பிரஜா சக்தி தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு கூட்டம் நேற்று (11) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசாங்கத்தின் “பிரஜா சக்தி” வேலைத்திட்டம் தொடர்பாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கலந்து கொண்டு விசேட உரையாற்றினார். மேலும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டு திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் மக்களுக்கான சேவைகள் குறித்து விளக்கமளித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பல அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.மக்களின் சமூக மற்றும் பொருளாதார வலுவூட்டலை முன்னிறுத்தும் “பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தை கிராம மட்டத்தில் திறம்பட செயல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.



காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களை பொதுமக்கள் சந்தித்து தங்களது பிரச்சனைகள் மற்றும் விடயஙகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் நேர விரையம், வீண் அலைச்சல் என்பவற்றை தவிர்த்து பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான நோக்கமாக கொண்டு இணையவழி நேர முன்பதிவு அமைப்பு அங்குரார்பன நிகழ்வு இன்று (11) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களை பொதுமக்கள் சந்தித்து தங்களது பிரச்சனைகள் மற்றும் விடயஙகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் நேர விரையம், வீண் அலைச்சல் என்பவற்றை தவிர்த்து பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான நோக்கமாக கொண்டு இணையவழி நேர முன்பதிவு அமைப்பு அங்குரார்பன நிகழ்வு இன்று (11) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம். எஸ் .சில்மியா, நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
முகவரி : https://kattankudyds.org
பிரதேச செயலகம் காத்தான்குடி.




















|
ReplyForward
|















