காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 4வது பிரதேச தினக் கூட்டமானது 2023.06.26 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
கடந்த பிரதேச தினக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பல், கண் சம்பந்தமான மருத்துவ முகாம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மாணவர்களின் போசாக்கு நிலை தொடர்பாக அன்னசார் பாடசாலை அதிபரிடம்  கலந்துரையாடி மாணவர்களிடம் முன்னேற்றம் காணப்படுவதாக சிறுவர் இல்ல முகாமையாளர் தெரிவித்தார்.
 
கால்நடை மாடுகளுக்கு ஒருவகை தோல் நோய் பரவுவதாகவும் காத்தான்குடியைச் சேர்ந்த 2 கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் மாடுகளுக்கு இந் நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக UC மற்றும் MOH க்கு கடிதம் மூலம் அறிவித்ததாகவும் கால்நடை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.அவ்வாறான நோய்த்தொற்றுள்ள மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அனைத்து மாடுகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க Antibiotic ஊசி ஏற்றப்படல் வேண்டும். ஊசி போட்டு 1மாதத்திற்கு பின் இறைச்சிக்காக பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
அடுத்து பிரதேச செயலாளரின் பராமரிப்பின் கீழ் உள்ள கட்டிடங்கள் நகரசபைக்கு வழங்கப்பட்டிருந்தது.அதனை உரிய நடவடிக்கைக்காக பயன்படுத்தாது பிரதேச செயலாளரின் அனுமதியின்றி வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வும் அதனைப் மீளப் பெற்று காணிச்சட்டம் 224 சட்டத்தின் 1,5,7,8,இலக்க சட்டத்தின் பிரகாரம் காணி ஆணையாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதியினைப் பெற்று உரிய நிறுவனங்களுக்கு வழங்க முடியும் என காணி உத்தியோகத்தரால் விளக்கமளிக்கப்பட்டது.
 
மேலும் டெங்கு நுளம்பின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் காத்தான்குடியில் 2 பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதோடு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது உறுதிப் படுத்தபடவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் CMSO வினால் தெரிவிக்கப்பட்டது.
 
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்டத்தில் உள்ள திணைக்களங்களின் தலைவர்,செயலாளர் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி கலாசார பிரிவு நடாத்தும் மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப் பட்டறையானது இன்று (20) செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இப்பயிற்சிப்பட்டறையானது மாணவர்களின் கலை ஆர்வத்தினை மேம்படுத்தவும் , பாடசாலை மட்ட சஞ்சிகை போட்டிக்கான தரமான ஆக்கங்களை மாணவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும், மாணவர்களுக்கு சிறுகதை எழுதுவது தொடர்பான பயிற்சிகளை வளவாளராக கலந்து கொண்ட ஓட்டமாவடி அறபாத் கலாபூஷணம் பாத்திமா முஹம்மட் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
 
இப்பயிற்சியில் தரம் 1-13 வரை கல்வி கற்கும் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் எம்ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top