மேற்படி போட்டித் தொடரில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள்  கலாசாரப் பிரிவு, பிரதேச செயலகம், காத்தான்குடி,

விண்ணப்படிவங்களைப் பெற்று,  பூரணப்படுத்தி ஆக்கங்களுடன்  2022.05.10 ஆந் திகதிக்கு முன்னர் கலாசாரப்பிரிவில் ஒப்படைக்க முடியும். சுற்றுநிருபம் இணைக்கப்பட்ள்ளது.மேலதிக விபரங்களுக்கு - அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷh

தொலைபேசி இலக்கம்  - 0775338836, 0758726699

https://drive.google.com/file/d/1w-XiV2Q7ShiU_j7fw4G0sUfSrlk-hBbr/view?fbclid=IwAR2R0Ra78CwGhKkiHaEh-j9IGYMdLmVCIFRSv6meSn7FTomd8maSfmzJSTw

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினக்கொண்டாட்டமானது 2022.03.08 ஆந் திகதி முற்பகல் 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்கள் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக ஒரு நிமிட இறைவணக்கத்துடன் ,கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எம்.ஐ.எம்.ஜவாஹிர் அவர்களினால் வரவேற்புரை இடம்பெற்றது.இந்நிகழ்வில் அதிதிகளாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், பண்பாட்டலுவல்கள் திணைக்கள சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.குணபால, IWARE  நிறுவனப் பணிப்பாளர் திருமதி.அனிசா பிர்தௌஸ, ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளரின் தலைமையுரை இடம் பெற்றதோடு பிரதேச பெண் கலைஞர்களின் அறிமுகமும் இடம் பெற்றது.அடுத்த நிகழ்வாக காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தினால் கவியரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வின் தலைவராக கலாபூசணம் காத்தான்குடி பாத்திமா அவர்களும் கவி பாடியோர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், திருமதி.ஜுஸ்லா றமீஸ்(சலனி) , திருமதி.அஜீறா கலீல்தீன் , திருமதி.முபீதா றமீஸ், திருமதி.ஜெஸ்மின் றமீஸ், மற்றும்  காத்தான்குடி றுஸ்தா, ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து  கலாசார மத்திய நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நாடகம்இ குழுப்பாடல் மற்றும்  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.சுமையா முஹமட் றஷீட் அவர்களின் பாடல் மற்றும் கவிஞர் றபாய்தீன் அவர்களது மகளிர் தினக் சிறப்புக் கவிதையும்  இடம் பெற்றது.திரு.எம்.ஐ.எம்.றம்ஸி (YSO) தொகுத்து வழங்கிய இந்நிகழ்விற்கு இஸ்லாமிய இலக்கிய கழகத்தலைவர் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் உட்பட நிருவாக உறுப்பினர்கள், IWARE நிறுவன அங்கத்தவர்கள்,மற்றும் பெண் எழுத்தாளர்கள், இனிப்பு பண்டங்கள் தயாரிப்பாளர், இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வானது திருமதி.ஜீ.எம்.எம்.மபாஹிறா (WDO) அவர்களின் நன்றயுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான திரு.எம்.ஐ.எம்.ஜவாஹிர், திருமதி.வீ.சிந்து உஷா, மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஏ.ஏ.எவ்.நுஹா, ஆகியோரின்  ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட குறும்படப் பயிற்சிப் பட்டறையானது 2022.02.22 ஆந் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் அதிதிகளாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.ரீ.குணபால ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இப்பயிற்சி பட்டறையின் வளவாளராக காத்தான்குடியைச் சேர்ந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் 'சிறகுநுனி' அமைப்பின் தயாரிப்பாளருமாகிய ஆத்மா ஜாபிர் அவர்கள் கலந்து சிறப்பாக பயிற்சிகளை வழங்கியிருந்தார்.அத்துடன் இப்பயிற்சி பட்டறையில் பாடசாலை மாணவர்கள், பிரதேச கலைஞர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் போன்ற 40 ற்கும் மேற்பட்ட குறும்படம் தயாரிப்பில் ஆர்வமுள்ள கலைஞர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

சுனாமி திட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடலானது 2022.02.28 ஆந் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.குகந்தினி கோபாலசிங்கம் அவர்களது ஏற்பாட்டில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அவர்கள் சுனாமி திட்டம் தயாரித்தல் தொடர்பாகவும், அதன் அவசியம் தொடர்பாகவும், காத்தான்குடியில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில்  மக்கள் குடியிருப்புக்கள் இருப்பதனால் இத்திட்டம் மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் திரு.எஸ்.சயந்தன், திரு.எம்.சகீல் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், 167A, 167B, 167C, 167D, 166A, 165B, 162, 162A ஆகிய பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் முதியோர் தேசிய செயலகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 'திரியப்பியச' வீடானது 2022.02.02 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி 167E  கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் முதியோர் அலிமா உம்மாவிற்கு 3 இலட்சம் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடு கையளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப்பரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன், 167E  கிராம உத்தியோகத்தர் திரு.ஏ.ஜீ.ஏ.றசாக், முதியோர் மேம்பாட்டு உதவியாளர் திருமதி.ஹனாதி மபாஸ், ஸம் ஸம் முதியோர் அமைப்பின் தலைவர் திரு.எம்.ஹிஸைன், EDO  திரு.எஸ்.சிவாகரன், ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top