


காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிர்வாகக் கிளையில் கடந்த 2021.2.10ம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் 3:15 மணி அளவில் முதலுதவிப் பயிற்சி ஒன்று இடம்பெற்றது. இப்பயிற்சியை திருமதி P.சிந்துஜா அவர்கள் வழங்கியிருந்தார். இதன்போது அவசரமானதும் அவசியமானதுமான முதலுதவியை எவ்வாறு மேற்கொள்வது? முதலுதவியின் நோக்கம் என்ன? முதலுதவி பயிற்சியை பெறுவதனால் கிடைக்கும் நன்மைகள் எவை? முதலுதவி பெட்டியில் உள்ள பொருட்கள் எவை? பொருட்களின் பாவனை முறை என்ன? போன்ற பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இத் தரவலையத் திட்டமானது அலுவலக உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளரும் நிர்வாக உத்தியோகத்தருமான திருமதி SJM.ஜலால்தீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் தங்கநிலா தரவளைய சகல அங்கத்தவர்களும் முதலுதவியின் அவசியம் மற்றும் புதிய பயன்பாடுகள் தொடர்பில் அறிவூட்டல் பெற்றுக்கொண்டமையும் சிறப்பம்சமாகும்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் பிரதேச கலாசார அதிகாரசபை மற்றும்காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் பிரதேச கலாசார அதிகாரசபை மற்றும்பிரதேச கலாசார பேரவையின் கலாசார விழாவினை முன்னிட்டு 2019 ஆண்டுக்கான'ஸம்ஸம்' கலாசார சிறப்பு மலரினை ஏழாவது இதழாக 31-01-2020ம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் வெளியிடப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நிர்வாக கிளையில் தங்க நிலா உற்பத்தித் திறன் தர வளையத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒரு திட்டமாக இச் சஞ்சிகை கடந்த 2020. 12.02ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு நிர்வாக கிளையில் பிரதேச செயலாளரும் அலுவலக உற்பத்தித் திறன் மேம்பாட்டு குழுத் தலைவருமான திரு U.உதயஸ்ரீதர் அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது உற்பத்தித் திறன் ஒருங்கிணைப்பாளர் திருமதி SJM. ஜலால்தீன், ஏனைய சகல தரவளைய தலைவர்கள், மற்றும் உற்பத்தித்திறன் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். இச்சஞ்சிகையை ஆக்கும் திட்டமானது தங்க நிலா உற்பத்தித்திறன் தரவளைய தலைவரான திரு MIM.பாயிஸ் அவர்களின் முன்மொழிவுக்கு அமைய திருமதி M.இர்பானா, திருமதி B.பௌசானா, திருமதி F.ஸனீரா மற்றும் செல்வி ஜதுஷிகா ஆகியோர் சஞ்சிகை ஆக்க குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அத்துடன் இச்சஞ்சிகையின் பிரதிகள் தரவளைய தலைவர், பிரிவு தலைவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன்கருதி அலைபேசி மென்பொருள் Mobile Application ஒன்று 31-01-2020ம் திகதி பிரதேச கலாசார நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் வெளியிடப்படவுள்ளது.
இம் மென்பொருள் மூலமாக பிரதேச செயலக அடிப்படைத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதுடன் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் விபரங்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் மிகமுக்கியமாக பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் சேவைகள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள முடிவதுடன் அதற்கு தேவையான ஆவணங்களை நேர விரயம் இன்றி இலகுவில் தயாரித்துக் கொள்ள முடிவதுடன் அச்சேவை தொடர்பான உத்தியோகத்தர்களின் விபரங்களையும் இந்ந மென்பொருளிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.
இம் மென்பொருள் முழுமையாக பிரதேச செயலக வழங்களைக் கொண்டு எதுவித செலவும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இம் மென்பொருளை பிரதானமாக காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் தகவல் தொழிநுட்ப முகாமையாளருமாகிய (LGM IT Admin) AGM. பஹ்மி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் உதவியாளர்களாக இம்மொருள் உருவாக்கத்தில் பாத்திமா சஹாமா, பாத்திமா பாழிலா மற்றும் சிஹ்மா நுஸ்ரி ஆகியோர் கடமையாற்றினர். இம்மொன்பொருள் உருவாக்கத்தில் பாடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகம் சார்பாக எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இம்மென்பொருள் தற்போது ....... தொலைபேசிகளில் மாத்திரம் இயங்குவதற்கு தற்போது வடிவமைக்கப்படடுள்ளது. விரைவில் ஏனை ஐபோன் தெலைபேசிகளிலும் இயங்குவதற்கு வடிவமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..
தற்போது இம்மென்பொருளினை எமது பிரதேச செயலக இணையதளத்தில் பின்வரும் இணைப்பில் தரவிரக்கிக் கொள்ள முடியும்.
Download Here : DSKAPP2020





















